Profile
சிறு குறிப்பு
மூலவர் : ஸ்ரீ சௌந்திரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ சௌந்திரவல்லி
உத்ஸவர்: நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன் அமர்ந்தநிலை, பச்சைவண்ணன் பவழவண்ணன்
பூஜை: ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
சேஷத்ரம்: சௌந்தராரண்யம்
விமானம்: பத்ரகோடி விமானம்
புஷ்கரணி: சாரபுஷ்கரணி – சௌந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்
கிருதயுகம் : துருவன் / ஆதிசேஷன் பிரத்யத்க்ஷம்
திரேதாயுகம்: பூமிதேவி பிரத்யத்க்ஷம்
த்வாபரயுகம் : மார்க்கண்டமகரிஷ பிரத்யத்க்ஷம்
கலியுகம்: சாலிசுகன் – நாகராஜன் பிரத்யத்க்ஷம்
நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும் பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம். ஆதிசேஷன் பூர்ண நிலையில் உள்ளார் – காலசர்ப்பதோஷ நிவர்தி ஸ்தலம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ மத் வரவரமுனயே நம
ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பரப்ரும்மணே நம:.
திருநாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு:
மனிதராய்ப் பிறந்தார் அனைவரும் திருமாலுக்கு அடிமை செய்து தீவினையை நீக்க முயல வேண்டும். அதற்கு இடமாய் இருப்பது அப்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களாகும். இறைவன் காற்றாகவும், கனலாகவும், நீராகவும், நிலனாகவும் உருக்காண ஒண்ணாது இயற்கையோடு இயைந்து நின்றால் அடியவர்களால் காண முடியாதென திரு இந்தளூரில் நம்மனோர் கட்புலன் காண தமர் உகந்த வடிவத்தில் காட்சி தருகிறேன் என்று திருமங்கை மன்னர் பாடியுள்ளார். எனவே, இறைவன் அடியவர் பொருட்டே திருக்கோவில்களில் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ளான் என்பது விளங்கும். திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள இந்நிலையை அர்ச்சாவதாரம் என்பர். இது இறைவனுக்குரிய ஐவகை நிலைகளில் ஒன்றாகும். இறைவனுடைய அழகும் குணங்களும் இவ்வடிவத்தில்தான் ஒளி விடுகின்றன. உயிரினங்கள் உய்ந்தால் அன்றி இவ்விடம் வட்டு புடைபெயரேன் என்ற உறுதியோடு நின்றும், இருந்தும் கிடந்தும் நம்மை வாழ்விக்க இந்நில உலகில் தோன்றிய திருமேனியே அர்ச்சையாகும். இத்தகைய அர்ச்சாவதார எம்பெருமான்களை ஆழ்வார்கள் என்ற அடியவர் பெருமக்கள் அந்தமிழ் இன்பப் பாக்களால் பாடியுள்ளார்கள்.
திருக்கோயில் நடைதிறப்பு நேரம் | காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை | மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
காலபூஜை விபரம்
ஆறுகால பூஜைகள் :
காலை 7.30 மணி : விஸ்வரூப தரிசனம்
காலை 8.30 மணி : காலசந்தி
பகல் 12.00 மணி : உச்சிகாலம்
மாலை 5.30 மணி : சேவா கால தொடக்கம்
மாலை 6.00 மணி : சாயரட்சை
இரவு 9.00 மணி : அர்த்தஜாமம்
திருவிழா நேரங்களில் பூஜை நேரங்கள் மாறுபடும்.
Map
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.